வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (16:56 IST)

மாநிலங்களவைத் தேர்தல்.! எல்.முருகன் உள்பட பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல்.!!

L murugan
மாநிலங்களவைத் தேர்தலையொட்டி மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
 
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 27ம் தேதி அன்றே அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ள பாஜக வேட்பாளர்கள் தங்களது மீட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தனர். 
 
bjp canditates
அதன்படி மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார், உமேஷ் நாத் மகாராஜ் உள்ளிட்ட 4 பாஜக வேட்பாளர்களும் முதல்வர் மோகன் யாதவ், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

 
முன்னதாக,  செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநிலங்களவைத் தேர்தலில்  தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக பாஜகவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்