திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2018 (09:10 IST)

சாலையோரம் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை அமைச்சர்: வைரலாகும் புகைப்படம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில் ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சாலையோரம் சிறுநீர் கழித்த புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காளிச்சரண் சாரஃப் என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது சாலையோரம் காரை நிறுத்தி அங்கிருந்த கட்டடம் ஒன்றின் சுற்றுச்சுவரில் சிறுநீர் கழித்தார்.

இதை புகைப்படம் எடுத்த ஒருவர் சமூக வலைதளங்களி்ல் பதிவுசெய்துவிட்டதால் இந்த புகைப்படம் ஒருசில மணி நேரங்களில் வைரலாக பரவியது. சாலையோரம் சிறுநீர் கழித்தால் ராஜஸ்தானில் ரூ.200 அபராதம் விதிக்கும் சட்டம் உள்ளது. ஆனால் அந்த சட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சரே மீறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து ஜெய்ப்பூர் மாநகராட்சி சார்பில் அமைச்சரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் அமைச்சர் தரப்பில் இதற்கு பதில் அளிக்காமல் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் இந்த விஷயத்தை பெரிதாக்கி வருவதால் அமைச்சருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது