பிரிக்க நினைத்தால் கால்களை வெட்டி வீசிவிடுவேன்: மிரட்டும் அரசியல் கட்சி தலைவர்!

பிரிக்க நினைத்தால் கால்களை வெட்டி வீசிவிடுவேன்: மிரட்டும் அரசியல் கட்சி தலைவர்!


Caston| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (10:16 IST)
மாராட்டியத்தில் இருந்து மும்பையை யாராவது பிரிக்க நினைத்தால் அவர்களின் கால்களை வெட்டுவேன் என்று மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.

 
 
மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் மும்பை தாதரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அந்த கட்சியின் தலைவர் ராஜ்தாக்ரே மும்பை மாநகராட்சி உள்பட மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநகராட்சிகளிலும் மராட்டிய நவநிர்மாண் சேனா போட்டியிடும் என அறிவித்தார்.
 
மேலும் பாஜகவை மிரட்டும் விதமாக அவர் பேசினார். மும்பையை மராட்டியத்தில் இருந்து பிரிக்க பாஜக திட்டமிடுவதாக குற்றம் சாட்டிய அவர், மும்பையை யாராவது பிரிக்க நினைத்தால் அவர்களின் கால்களை வெட்டுவேன் என ஆவேசமாக கூறினார்.
 
மும்பையில் அதிக அளவில் பணப்புழக்கம் உள்ளதால் மும்பையை தங்கள் வசம் கொண்டு வர குஜராத் மக்கள் நினைக்கின்றனர். பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் தான் இதற்கு முக்கிய காரணம்.
 
பாஜக மத்தியிலும், மராட்டியத்திலும் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்ற துடிக்கிறது என ராஜ்தாக்ரே கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :