முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி!

Last Updated: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (17:10 IST)

இந்தியாவில் நாள்தோறும் அரசியல் தலைவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜனாதிபதியாக 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முதல் 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி வரை பதவி வகித்தவர் பிரனாப் முகர்ஜி.
இவர் மருத்துவமனையில் வேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா சோதனைகள் செய்துகொள்ளும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :