நிதியமைச்சர் திடீர் மரணம்: 3 நாள் துக்கம் என அரசு அறிவிப்பு

Last Modified புதன், 5 ஜூன் 2019 (22:11 IST)
உத்தர்காண்ட் மாநிலத்தின் நிதியமைச்சர் இன்று திடீரென காலமாகிவிட்டதை அடுத்து அம்மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது
உத்தரகாண்ட் மாநிலத்தின் நிதியமைச்சராக பிரகாஷ் ஃபண்ட் என்பவர் இருந்து வந்த நிலையில் அவர் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் அமெரிக்காவிலும் சிகிச்சை எடுத்து கொண்டார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று அவர் அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 58

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் பிரிந்த பின்னர் இவர்தான் முதல் சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் பிரகாஷ் பண்ட் அவர்களின் மறைவை அடுத்து நாளை அரசு விடுமுறையாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அவரது மறைவால் மாநிலம் முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நிதியமைச்சருக்கு கட்சிபேதம் இன்றி அனைத்து அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :