அயர்லாந்து புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

Bharathi| Last Modified புதன், 23 செப்டம்பர் 2015 (06:55 IST)
7 நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி அயர்லாந்து நாட்டிற்கு தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டுச் சென்றார். 

 
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக முதலில் அயர்லாந்து செல்லும் மோடி, அந்நாட்டு பிரதமர்  
என்டா கென்னியை சந்தித்து இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
 
கடந்த 60 ஆண்டுகால இடைவெளியில் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் என்ற கவுரவத்தையும் இதன் மூலம் மோடி பெற்றுள்ளார். அயர்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொள்ளும் மோடி அடுத்தப்படியாக அமெரிக்கா செல்கிறார்.
 
ஐ.நா. சபையின் 70வது ஆண்டுக்கூட்டத்தின் ஒரு பகுதியான நிலையான வளர்ச்சி தலைப்பில் நடைபெறும் உச்சிமாநாட்டிலும் மோடி சிறப்புரை ஆற்ற உள்ளார். பின்னர் பேஸ்புக் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :