திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2022 (06:54 IST)

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்.. டுவிட்டரில் பகிர்ந்த மோடி!

Hiraba Modi
பிரதமர் மோடியின் தாயார் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் காலமானார் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
பிரதமர் மோடியின் தாயாரின் ஹீராபென் மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை குறித்த தகவல்களை அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து கொண்டிருந்த நிலையில் சற்று முன் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து இந்திய அரசியல்வாதிகள் மற்றும் உலக அரசியல் வாதிகள் அவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது தாயாரின் மறைவு குறித்து தனது டுவிட்டரிலும் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். 
 
பிரதமர் மோடி தனது தாயார் மறைவு குறித்து கூறுகையில் தாயாரின் 100வது பிறந்தநாளை அவரை சந்தித்தபோது அவர் தனக்கு ஒரு அறிவுரை கூறினார் என்றும், புத்திசாலித்தனமாக வேலை செய்யுங்கள் தூய்மையான வாழுங்கள் என்று கூறியதாகவும் அதை நான் கடைப்பிடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva