வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (18:55 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்… ரூ.300 டிக்கெட்டில் பாத யாத்திரைக்கு அனுமதி !

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 19ஆம் தேதிமுதல் 27 ஆம் தேதிவரை பிரமோஸ்சவம் நடைபெறவுள்ளது. இதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் வரும் 15 ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

எனவே, கோவில் நிர்வாகம்  வரும் 30 ஆம் தேதி வரை ரூ. 300 கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், ரூ.300 கட்டண தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் என்றும், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து செல்ல  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாத யாத்திரைக்கு தற்போது  மீண்டும்  அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
மேலும், கோவிலிலுள்ள ஸ்ரீவாரிமெட்டு பாதையில் நடைபயணமாக வர தடை நீடிக்கிறது நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திலிருந்து புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் நடைபயணமாக வரவேண்டாம்  என்று  தேவஸ்தானம் கூறியுள்ளது.

இதேபோல் மேலும், அலிபிரி பாதையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்து சென்று தரிசிக்கலாம் என்று திருப்பது தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.