திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (11:47 IST)

இதுக்கு இல்லையாங்க எண்டு… நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
தற்போது நாடாளுமன்றத்தில் பணவீக்கம், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளப்பி வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மையப்பகுதிக்கு வந்து விட்டதால் நேற்று நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதே பிரச்சினை காரணமாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்கு எதிராக குரல் எழுப்பி எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.