வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

Parliament
Annakannan| Last Modified வெள்ளி, 20 ஜூன் 2014 (18:18 IST)
புது தில்லி
  
2014 ஜனவரி முதல் மே மாதம் வரை மொத்தம் 30.52 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். 2013ஆம் ஆண்டு இதே கால அளவில் வந்த சுற்றுலாப் பயணிகளை விட இவ்வாண்டு 1.89 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்துள்ளனர். இந்த மே மாதம் மட்டும் 4.21 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
 
 
அதே போல் 2013 ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான அன்னிய செலாவணி வருவாய் ரூ.43,614 கோடியாக இருந்தது. இந்த 2014 ஆண்டு 12.6 உயர்ந்து அன்னிய செலவாணி வருவாய் ரூ.49,121 கோடியாக உள்ளது.
 
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முக்கிய துறைமுகங்களின் மூலம் கிடைத்த தரவு மூலமும் அன்னிய செலாவணி வருவாய் ரிசர்வ் வங்கியின் தரவு மூலமும் தொகுக்கப்பட்டது. சுற்றுலா அமைச்சகம் ஒவ்வொரு மாதமும் இந்தத் தரவுகளைத் தொகுக்கின்றது.
 


இதில் மேலும் படிக்கவும் :