திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (18:20 IST)

விடுதிகளில் தேசிய கீதம் கட்டாயம்

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு நடத்தும் விடுதிகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


 
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தங்கும் விடுதிகளை மாநில அரசு நடத்தி வருகிறது. அரசு விடுதிகளில் தினமும் தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்கி அந்த மாநிலத்தின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவானது திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டது. தேசிக கீதம் இசைக்கும்போது விடுதியில் உள்ள அனைவரும் வந்து கூடி நின்று தேசிய கீதம் பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 789 அரசு விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
 
திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டபோது நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் விடுதிகளில் தேசிய கீதம் கட்டாயம் என ராஜஸ்தான் அறிவித்துள்ளது. இதற்கு என்ன எதிர்ப்பு எழ போகுது என்று தெரியவில்லை.