1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:33 IST)

திருப்பதியில் முகேஷ் அம்பானி: ரூ.1.5 கோடி நன்கொடை!

Mukesh
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி திருப்பதி கோவில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி ஆழ்ந்த தெய்வ பக்தி கொண்டவர் என்பதும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் இன்று அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து உள்ளார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று மரியாதை கொடுத்தனர் 
 
இந்த நிலையில் சுவாமி தரிசனம் முடித்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தரிசனத்திற்கு பிறகு ஒன்றரை கோடி ரூபாய் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.