லடாக்கில் கொடியேற்றினார் தோனி

Last Modified வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (18:48 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி, ராணுவத்தில் கௌரவ லெப்டினட் கர்னலாக உள்ளார் என்பதும், அவர் தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் தொடரில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு ராணுவத்தில் சேவை செய்து வருவதும் தெரிந்ததே
இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வர்ம் நிலையில் தற்போது ஜம்முகாஷ்மீரில் இருக்கும் தோனி ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினார்

விரைவில் தனி யூனியனாக பிரிக்கப்பாவுள்ள லடாக் பகுதியில் தோனி மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அவர் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். அவருடைய பேச்சுக்கு ராணுவ வீரர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தோனி, பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் லடாக்கில் இன்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :