ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (15:55 IST)

எனக்கு நீதி தான் வேண்டும்.. இழப்பீடு தொகை வேண்டாம்.. மருத்துவ மாணவியின் தந்தை..!

கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனக்கு இழப்பீடு எதுவும் வேண்டாம் என்றும் தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா மருத்துவ மாணவிக்காக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு தனது நன்றி என தெரிவித்த மாணவியின் தந்தை எங்களுடன் துணை நிற்கும் அனைவரையும் எனது மகன் மகன்களாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.

எனக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை நிராகரித்து விட்டேன் என்றும் எனது மகளின் மரணத்திற்காக இழப்பீடு தொகையை நான் ஏற்றுக்கொண்டால் அது எனது மகளுக்கு மன வலியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

எனக்கு தேவை என்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி தான் என்றும் எந்த விதமான இழப்பீடும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran