ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (10:06 IST)

ஒருவழியாக முதல்வரை முடிவு செய்த திரிபுரா.. நாளை பதவியேற்பு..!

manik saha
ஒருவழியாக முதல்வரை முடிவு செய்த திரிபுரா.. நாளை பதவியேற்பு..!
திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது என்றும் இதனை அடுத்து அக்கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
மொத்தமுள்ள 60 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் கூட்டணி கட்சியி ஒரு இடத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே திரிபுரா மாநிலத்தில் மாணிக் சாகா என்பவர் முதலமைச்சராக இருந்த நிலையில் திடீரென பிப்லாப் தேவ் என்பவரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினார். இதனை அடுத்து பாஜக மேலிட தலைவர்கள் இரு தரப்பினரிடம் பேசி தற்போது மாணிக் சாகா தான் முதல்வர் என்பதை உறுதி செய்துள்ளனர். 
 
இதனை அடுத்து ஆளுநரின் அழைப்பை ஏற்று மாணிக் சாகா நாளை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாகவும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சிகள் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள ன.
 
Edited by Mahendran