திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (13:52 IST)

பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 குறைப்பு: முதல்வர் அதிரடி உத்தரவு!

petrol
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூபாய் ஐந்தும், டீசல் ரூபாய் மூன்றும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது அம்மாநில மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தது என்பதும் இதனை அடுத்து பல மாநிலங்களில் பெட்ரோல் டீசலுக்கான வரி குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் வரிகள் குறைக்கப்படவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேயின் ஆட்சி கவிழ்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி மலர்ந்தது
 
முதல்வராக பதவியேற்ற ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 5-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் மூன்றும் குறைக்கப்படுவதாக ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்