திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (18:22 IST)

முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது
முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது என கர்நாடக மாநில அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் அவருடைய அமைச்சரவையில் ஈஸ்வரப்பா என்பவர் கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து அமைச்சராக உள்ளார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  ஈஸ்வரப்பா பெலகாவி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் எந்த ஒரு சமூக பிரிவினருக்கும் தேர்தலில் போட்டியிட தொகுதிகளில் வழங்குவோம் என்றும் ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.
 
ஏனெனில் இந்த தொகுதியை இந்துத்துவா மையங்களில் உள்ள தொகுதி என்றும் அவர் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது என்று பகிரங்கமாக அமைச்சர் ஒருவரே கூறியிருப்பது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது