ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (09:48 IST)

பாஜகவின் ராமரை வழிபட மாட்டோம், காந்தியின் ராமரை தான் வழிபடுவோம்: சித்தராமையா

பாஜகவின் ராமரை வழிபட மாட்டோம் என்றும் நாங்கள் காந்தியின் ராமரை தான் வழிபடுவோம் என்றும்  கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் இந்த கோவிலுக்கு பல முக்கியஸ்தர்கள் வருகை தந்தனர்.  இந்த நிலையில் கோவில் திறப்பு விழா குறித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா ‘ஜெய்ஸ்ரீராம் கோஷம் என்பது யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல, அது ஒவ்வொரு பக்தனின் சொத்து.

மகாத்மா காந்தி ராமரின் சிறந்த பக்தர், அவரது உதடுகள் கடைசி நேரத்தில் கூட ராமர் பெயர்தான் உச்சரித்தது. காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் ராமரை வணங்குகிறது பாஜகவின் ராமரை அல்ல என்று தெரிவித்தார்

மேலும் கும்பாபிஷேக தினத்தில் விடுமுறை அறிவிக்கவில்லை என்பதற்காக தன்னை இந்து விரோதி என முத்திரை குத்துகிறார்கள் என்றும் மத்திய அரசே அரை நாள் மட்டும் தான் விடுமுறை அறிவித்தது என்றும் இந்த நிகழ்வு உத்தரபிரதேசத்தில் நடைபெறும் நிலையில் எதற்காக கர்நாடகத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

Edited by Siva