திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:19 IST)

எனது சஸ்பெண்ட் ஆர்டரை திரும்பப் பெறவேண்டும் – கஃபீல் கான் கோரிக்கை!

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு இப்போது நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள கபீல் கான் தன் பணியிடை நீக்கத்தை உத்தரவை திரும்பப் பெறவேண்டும் எனக் கூறியுள்ளார்.

2017இல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக இருந்த கஃபீல் கான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்ட அவர் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் கூறியுள்ள உயர் நீதிமன்றம் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இப்போது தான் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டதால் தனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கஃபீல் கான் தெரிவித்துள்ளார்.