1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 மே 2021 (10:15 IST)

உலக அளவில் அதிக மரணங்களை பதிவு செய்யும் நாடாக உருவெடுத்த இந்தியா !

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,29,92,517 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,49,992 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 
 
அதிலும், இந்தியா உலக அளவில் அதிக மரணங்களை பதிவு செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது. மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மரண எண்ணிக்கை அதிகமாக இருப்பது கொரோனா மீதான பயத்தை அதிகரித்துள்ளது.