1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:19 IST)

எலி வைத்த தீயால் ஒரு கோடி மதிப்புள்ள கார்கள் சேதம்: 6 மாதங்களுக்கு பின் தெரிந்த உண்மை!

எலி வைத்த தீயால் ஒரு கோடி மதிப்புள்ள கார்கள் சேதம்
ஒரே ஒரு எலி தீ வைத்ததினால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று கார்கள் சேதம் அடைந்த சம்பவம் ஆறு மாதங்களுக்குப் பின்னர் தற்போது தெரியவந்துள்ளது 
 
ஐதராபாத்தில் உள்ள கார் சர்வீஸ் நிலையம் ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள மூன்று கார்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து விசாரணை செய்த தீயணைப்புத் துறையினர் மற்றும் இன்சூரன்ஸ் அதிகாரிகள் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முடிவு செய்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்
 
இந்த நிலையில் தற்போது ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த தீ விபத்து ஒரு எலியினால் ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. அந்த அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பூஜை ஒன்றை செய்துள்ளதாகவும், அதற்காக அகல் விளக்குகள் ஏற்றியதாகவும் தெரிகிறது 
 
இந்த அகல் விளக்குகளில் ஒன்று அலுவலகம் மூடும் போது அணைக்காமல் இருந்துள்ளது. இந்த அகல்விளக்கு அருகே நள்ளிரவில் வந்த எலி ஒன்று விளக்கில் உள்ள திரியை எடுத்து சென்று பின்னர் அந்தத் திரியை ஒரு நாற்காலியின் மேல் போட்டு விட்டது. அந்த நாற்காலி தீப்பிடித்து அதன் பின்னர் அந்தக் கட்டிடம் முழுவதும் பரவி, தரை தளத்தில் இருந்த மூன்று கார்களையும் தீக்கிரையாக்கி விட்டது. இவையனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
 
இதனை அடுத்து இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்படவில்லை என்றும் ஒரு எலியினால் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது