இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

corona
இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!
siva| Last Updated: புதன், 27 ஜனவரி 2021 (10:16 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை கடந்துவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,89,527 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் கொரோனாவில் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 1,53,724ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,03,59,305 என்றும், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,76,498 ஆக உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :