1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 மே 2023 (17:17 IST)

1 லட்ச ரூபாய் செல்போனுக்காக அணை தண்ணீரை பம்புசெட் போட்டு வெளியேற்றிய அதிகாரி..!

ஒரு லட்ச ரூபாய் செல்போன் அணையில் விழுந்து விட்டதை அடுத்து அந்த செல்போனை எடுப்பதற்காக அணையில் உள்ள தண்ணீரை பம்பு செட் போட்டு வெளியேற்றிய அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கான்கேர் மாவட்டத்தில் கேர்கட்டா  என்ற அணைக்கு அரசு அதிகாரி ராஜேஷ் விசுவாஸ் என்பவர் சென்றபோது அவரது மொபைல் போன் அணையில் தவறி விழுந்து விட்டது. ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான அந்த செல்போனை எடுப்பதற்காக மூன்று நாட்களாக அணையில் இருந்து பம்பு செட் மூலம் அவர் தண்ணீரை வெளியேற்றியுள்ளதாக தெரிகிறது. 
 
இதன் மூலம் 21 லட்சம்  தண்ணீர் வெளியேற்றியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர் கடைசியில் செல்போன் கிடைத்த போதிலும் அது வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அணையில் இருந்த 21 லட்சம் தண்ணீரை வீணாக்கிய அரசு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என சத்தீஸ்கர் மாநில அமைச்சர் அபரஜித் உறுதி கூறியுள்ளார்.
 
Edited by Mahendran