திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (15:52 IST)

கூகுள் + ஜியோ - ரூ.33,000 கோடி முதலீடு: ஓ ஓஹோனு அம்பானி!!

ஜியோவில் முதலீடு செய்கிறது கூகுள் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி மற்றும் கூகிள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இடையிலான கலந்துரையாடல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை, இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் கூகிள் சார்பில் 10 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.75000 கோடி) முதலீடு செய்யப்படும். 
 
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவ கூகிள் இந்தியா சார்பில் இந்த தொகை வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக ரயில் நிலையங்களில் இலவச இணையம் அளிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் கூகிள் நிறுவனம் அரசுடன் இணைந்து சேவைகளை அளித்து வந்தது. 
தற்போது சீனாவுடனான தொடர்பில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சிகளில் கூகிள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய உள்ளது. 
 
சற்றுமுன் ஜியோவில் ரூ.33,000 கோடி முதலீடு செய்கிறது கூகுள் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அதாவது ஜியோவின் 7.7% பங்குகளை வாங்க கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என அறிவித்துள்ளார். 
 
ஏற்கனவே ஜியோவில் பல நிறுவனங்கள் முதலீடு செய்து வரும் நிலையில் தற்போது கூகுள் நிறுவனமும் முதலீடு செய்யயுள்ளது குறிப்பிடத்தக்கது.