ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:03 IST)

மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களை நிராகரித்த விவசாயிகள்.. மீண்டும் இன்று முதல் போராட்டம்..!

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று மத்திய அரசுக்கும், விவசாயிகள் பிரதிநிதிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது.

இந்த பேச்சு வார்த்தையின் போது மத்திய அரசு முன்மொழிந்த சில திட்டங்களை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் எனவே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று முதல் மீண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை காரணமாக தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ பேரணியை இன்று காலை 11 மணிக்கு தொடங்குவோம் என்று அறிவித்துள்ளது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் விவசாயிகள் போராட்டத்தை முறியடிப்பது எப்படி என்பதை குறித்து ஆலோசனையில் மத்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ஆம் தேதி பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் இந்த போராட்டம் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva