வியாழன், 27 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 18 ஜூன் 2016 (18:05 IST)

ஆளை விட்டால் போதும்; அடுத்த முறை வேண்டாம் : தெரித்து ஓடும் ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை மீண்டும் தொடர விருப்பமில்லை என்று ரகுராம்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நியமிக்கப்பட்டவர் ரகுராம்ராஜன். மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பின் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
 
ஆனால், ரகுராம்ராஜன் அதே பதவியில் நீடித்தார். இதற்கு பல எதிர்ப்பு கிளம்பியது. அவர் மீது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி பல குற்றாசாட்டுகளை கூறியிருந்தார். அவரை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
 
ஆனால், இது ஊடகங்களில் விவாதிக்கும் விவகாரம் அல்ல என்று மோடி கூறியிருந்தார். இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம்ராஜன் “இரண்டாவது முறையாக, நான் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் தொடர விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
 
எனவே, அவரது பதவி குறித்த சர்ச்சைக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.