திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 செப்டம்பர் 2018 (16:38 IST)

ரூபாய் நோட்டுகள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம்

ரூபாய் நோட்டுகளில் மாசு பட்டிருப்பதால் தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது என்றும் மக்களிடையே உள்ள அச்சத்தை உடனே போக்க வேண்டும் என்றும் இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 
ரூபாய் நோட்டுகளில் மாசு பட்டிருப்பதால் தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது என்றும் மக்களிடையே உள்ள அச்சத்தை உடனே போக்க வேண்டும்  அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி.நட்டா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
இந்தியாவில் புழங்கும்  ரூபாய் நோட்டுக்களில் உள்ள மாசுக்களால்  சிறுநீரக தொற்றுகள், மூச்சு பிரச்னை, தோல் நோய்கள், குடல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. 
 
இவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.