ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (14:20 IST)

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம்.. புதிய தேதி அறிவிப்பு..!

மத்திய பல்கலைக்கழங்களில் படிப்பதற்காக எழுதப்படும் CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மத்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் நிலையில் இதில் இளநிலை, முதுகலை பட்டய படிப்புகளுக்கு CUET நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 
 
2024ஆம் ஆண்டிற்கான CUET தேர்விற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 12 முதல் மார்ச் 12 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு மார்ச் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.
 
இந்த நிலையில் தற்போது இதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிகக்ப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏப்ரல் 3ம் தேதி வரை திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edit by Siva