வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (18:28 IST)

விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி ஆதரவு

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
 
டெல்லியை  நோக்கி விவசாயிகள் முன்னேறிவரும் நிலையில், சில எல்லைகளில் கான்கிரிட், இரும்பு தடுப்புகளை ஒன்றுசேர்த்து, அகற்றி டெல்லியை   நோக்கிச் சென்றுகொண்டுள்ளனர்.
 
அதேபோல், அம்பாலா எல்லையில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி வரும்  நிலையில்,  முகக் கவசம் அணிந்தபடி, விவசாயிகள் டிராக்டரில் செல்கின்றனர்.
 
இந்த  நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும்.  குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  சட்ட உத்தரவாதம் அளிப்பதன் மூலம் நாட்டின் 15 கோடி விவசாயிகளின் குடும்பங்கள் பயன்பெறும், நீதிக்கான காங்கிரஸ் பயணத்தின் இது முதல் உத்தரவாதம் என்று தெரிவித்துள்ளார்.