திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (14:53 IST)

தற்கொலைகள் அதிகமாக நடக்கும் நகரம் -சென்னைக்கு முதலிடம்!

இந்தியாவில் 53 மாநகரங்களில் நடக்கும் தற்கொலைகளில் சென்னையில் மட்டுமே 11 சதவீதம் நடப்பதாக புள்ளி விவரம் ஒன்று வெளியாகியுள்ளது.

மன அழுத்தம் மற்றும் தனிமையுணர்வு காரணமாக கிராமங்களை விட நகரங்களிலேயே அதிகளவில் தற்கொலைகள் நடக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் உள்ள 53 மாநகரங்களில் நடந்த தற்கொலைகளின் அடிப்படையில் நடந்த ஆய்வு ஒன்றில் சென்னையில் தான் அதிகளவு தற்கொலை நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

53 மாநகரங்களில் மட்டும் 2019-ல் 22,390தற்கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் 2,461 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.