ஆக்ஸிஜன் இறக்குமதி செய்ய வரி நீக்கம்! – மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆக்ஸிஜன் தயாரிக்கும் வசதி உள்ள மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் பிரித்தளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆக்ஸிஜன் தேவை கருதி ஆக்ஸிஜன் இறக்குமதிக்கான கலால் வரி, சுகாதர செஸ் வரி ஆகியவற்றை 3 மாதங்களுக்கு நீக்குவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.