1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 17 ஜூன் 2017 (15:34 IST)

கவர்ச்சி உடையில் மணமகள் போட்ட நடனம் - வைரல் வீடியோ

வட இந்தியாவில் மணப்பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்தை கொண்டாடும் விதமாக வெளியிட்ட வீடியவை யூடியூப்பில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.


 

 
சமீபகாலமாக வெட்டிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோ என்ற பெயரில், திருமணமாக உள்ள தம்பதிகளை வைத்து போட்டோ ஷூட் நடத்தப்பட்டு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் முறை அதிகரித்து வருகிறது. அதிலும் வட இந்தியாவில் இந்த பழக்கம் அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில், ஒரு மணப்பெண்பெண் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அப்பெண் அலங்காரம் செய்வது, குட்டையான டிரவுசர் அணிந்து தோழிகளுடன் நடனமாடுவது என ரணகளப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை யூடியூப்பில் இதுவரை 12 லட்சத்திற்கும் மேலானோர் கண்டு ரசித்துள்ளனர்.
 
ஒரு திருமண பெண் இப்படி உடை அணிந்து நடனமாடலாமா? இதுதான் கலாச்சாரமா? என சிலர்  வரிந்து கட்டிக் கொண்டு கருத்து தெரிவித்தனர். ஆனால், அப்பெண்ணிற்கு ஆதரவாக பலரும் நின்றனர். காரணம், அப்பெண் தெரிவித்த கருத்து.
 
திருமணப் பெண் என்றால் பொம்மை போல் அலங்காரம் செய்து கொண்டு, வெட்கப்பட்டுக்கொண்டு, அதிகம் சிரிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும், திருமணம் முடிந்து செல்லும் போது பெற்றோர்களை கட்டிக் கொண்டு அழவேண்டும் என சட்டமா? சந்தோஷம் என்றால் அது ஆண்களுக்கு மட்டும்தானா? ஆண்கள் சந்தோஷமாக நடனமாடுகிறார்கள்.. குடிக்கிறார்கள்?. ஏன் நாங்கள் நடனமாடக்கூடாதா? இது  போன்ற பழமையான சிந்தனைகளை உடைத்தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன் என அதிரடி காட்டியுள்ளார் அப்பெண்..