திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (15:42 IST)

அட கடவுளே!! யானைகளுக்கே மொத்த சொத்து: ஷாக் கொடுத்த நபர்

அக்தர் இமாம் என்பவர் தான் வளர்த்து வந்த யானைக்கு மொத்த சொத்துக்களையும் வழங்கியுள்ளார். 
 
பாட்னாவை சேர்ந்த விலங்கு காதலரான அக்தர் இமாம் தனது முழு சொத்தையும் தனது இரண்டு யானைகளான மோதி மற்றும் ராணிக்கு வழங்கியுள்ளார். இது அவர் வளர்த்து வந்த யானைகள். இவரது சொத்தானது 6 ஏக்கருக்கும் மேலான நிலம். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது, விலங்குகள் மனிதர்களை போலல்லாமல் உண்மையானவை. எனது யானைகளின் பாதுகாப்பிற்காக நான் பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். என் மரணத்திற்குப் பிறகு என் யானைகள் அனாதையாக இருக்க கூடாது. எனவே எனது சொத்துக்களை யானைகளுக்கு வழங்குகிறேன் என கூறியுள்ளார்.