1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (10:51 IST)

மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து ஆய்விற்கு மருத்து கட்டுப்பாட்டு ஆணைய நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

 
இந்தியாவில் டெல்டா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்துக்கு இறுதிக்கட்ட சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருத்துக்கு மருத்து கட்டுப்பாட்டு ஆணைய நிபுணர் குழு அனுமதி அளித்துள்ளது. 
 
பாரத் பயோடெக் நிறுவன நாசி வழியாக செலுத்தும் தடுப்பு மருந்துக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பின் வல்லுனர் குழு ஒப்புதல் அளித்ததோடு மூன்றாம் கட்ட ஆய்வின் அறிக்கையை உடனடியாக சமர்பிக்கவும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு உத்தரவு. 
 
மேலும் பாரத் பயோடெக் நிறுவன நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தை, பூஸ்டர் டோசாகவும் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.