ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (21:12 IST)

கார்கள் விலை உயரப் போகிறதா? அதிர்ச்சியான தகவல்

வரும் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள பிரபல கார்களின் விலை உயர உள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதாவது வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் கார்களின் விலை உயர்வதாக தகவல் வெளியாகிறது.

அதில், மாருதி, சுசுகி, டாடா மோட்டார்ஸ், மகேந்திரா, ஹோண்டா, ஆடி, பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை அடுத்தாண்டு ஜனவரியில் இருந்து 2%  முதல்  3% வரை உயர உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த கார்களின் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.