திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (00:22 IST)

உங்கள் தொழில் எதிரி எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஐநூறு ரூபாய் கொடுத்தால் ஆதார் அட்டை விபரங்கள் கூவிக்கூவி விற்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று அதிர்ச்சி தகவல் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை, ஆதார் விபரங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஆதார் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஒருவரின் ஆதார் எண் தெரிந்திருந்தால் அவர் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றார் என்பதை யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது எந்த ஒரு மொபைல் எண்ணில் இருந்தும் *99*99*1# என்ற எண்ணுக்கு டயல் செய்து ஏதாவது ஒரு ஆதார் எண்ணை அதில் பதிவு செய்தால், அந்த ஆதார் எண்ணுக்குரிய நபர் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார் என்ற விபரம் வருகிறது. இதனால் தொழில் செய்பவர்களுக்கு இடையே பல பிரச்சனைகள் உருவாகும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.