ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (12:26 IST)

அக்னிவீர் ராணுவ படையில் சேர விண்ணப்பிக்கலாம்..! – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

Agneepath
மத்திய அரசு அறிவித்த அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய விண்ணப்பங்கள் பெறத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகால தற்காலிக பணிவழங்கும் அக்னிபத் திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் பலர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு எழுந்தது. எனினும் இந்த திட்டத்தில் சேர்வதற்கான அறிவிப்புகளை இந்திய ராணுவம் வெளியிட்டது.

முன்னதாக இந்திய கடற்படை மற்றும் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜூலை 1 முதல் அக்னிவீர் ராணுவ பணி சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் பெற தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3 வரை இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ராணுவத்தில் General Duty Agniveer, Tech Agniveer, Technical (Aviation/Ammunition Examiner)Agniveer, Clerk / Store Keeper, Technical Tradesmen ஆகிய பணிகளுக்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கான வயது வரம்பு 17.5 வயதிலிருந்து 23 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்னிவீர் திட்டத்திற்கான உடற்தகுதி குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Notification/863_1_AGNIVEER_RALLY_NOTIFICATION.pdf என்ற அறிவிப்பை படிக்கலாம்.