திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (08:45 IST)

ஜெகன் அண்ணாவுக்கு ஜே!! கான்வேயை ஓரம் கட்டி அம்புலன்ஸுக்கு வழி!

ஜெகன் மோகன் ரெட்டி தனது பாதுகாப்பு வாகனங்களை ஓரம் கட்டி ஆம்புலன்ஸுக்கு வழை விட்டது பாராட்டை பெற்று வருகிறது. 
 
ஆந்திரபிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தோற்கடித்து பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றினார் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி. இதன் பின்னர் மக்களுக்காக பல அதிரடி நன்மைகளை சொன்னதை ஒன்னவாரு நிறைவேற்றி வருகிறார். 
 
இதனால் இவர் என்ன செய்தாலும் அது அம்மாநில மக்களுக்கு பிடித்து போகிறது. அந்த வகையில் சைஇபத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் பாதுகாப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
 
ஜெகன் தடப்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது விஜயவாடாவை நோக்கி காயமடைந்த நபருடன் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அவர் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
 
எனவே தனது பாதுகாப்பு வாகனங்கள் ஓரம் கட்டப்பட்டு ஆம்புலன்ஸுக்கு வழி விடப்பட்டது. இது வீடியோவாக வைரலாகி வருகிறது.