திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (08:32 IST)

டிகிரி போலின்னு தெரிஞ்சா பிரதமர் பதவி காலி..? – ஆம் ஆத்மியின் திட்டம் என்ன?

PM Modi sad
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் போலி என தெரிய வந்தால் அவர் பிரதமர் பதவியை இழப்பார் என ஆம் ஆத்மி கட்சித் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை கேட்டு விண்ணப்பித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த வழக்கில் பிரதமர் தன் சான்றிதழ்களை காட்டத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து பேசியுள்ள ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் “கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் என அமித்ஷா ஒரு படத்தை பகிர்ந்தார். அதில் யுனிவர்சிட்டி என்ற வார்த்தையே பிழையாக இருந்தது. அது போலி என்பதற்கு அதுவே ஆதாரம்.

அதுபோல கடந்த 2005 குஜராத் தேர்தலில் பேசிய பிரதமர் மோடி தான் பள்ளிக்கல்விக்கு மேல் மேற்கல்வி படிக்க முடியவில்லை என பேசியிருந்தார். பட்டப்படிப்பு முடித்திருந்தால் ஏன் அப்படி பேச வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “பிரதமரின் சான்றிதழை கேட்டவுடன் மொத்த பாஜகவினரும் சான்றிதழ் போலி இல்லை என நிரூபிக்க போராடுகின்றனர். விசாரணை நடத்தப்பட்டால் அவருடைய சான்றிதழ் போலி என தெரிய வருவதுடன், தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவலை அளித்ததற்காக அவர் பதவியும் இழக்க வேண்டி வரும். தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் அவர் இழக்க நேரிடும்” எனக் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K