ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (08:09 IST)

கர்ப்பிணி ஆட்டை கற்பழித்த காமுகன்: பீகாரில் அதிர்ச்சி

பீகாரில் கர்ப்பிணி ஆட்டை காமுகன் ஒருவன் கற்பழித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பெண்கள், குழந்தைகளை தொந்தரவு செய்து வந்த காமுகர்கள் தற்பொழுது விலங்குகளையும் விட்டுவைப்பதில்லை.
 
பீகார் மாநிலம் பர்சா நகர் என்ற பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டின் வெளியே தனது ஆட்டை கட்டி போட்டு வைத்திருந்தார். வீட்டிலிருந்த அவர் வெளியே வந்து பார்த்தபோது ஆடு இறந்து கிடந்தது. 
 
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரித்ததில் குடிகாரன் ஒருவன் போதையில் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த அயோக்கியன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உயிரிழந்த ஆடு 3 மாதம் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.