1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (08:35 IST)

பிணைக்கைதியாக 20 பேர்: ஜாமீனில் வெளிவந்த கொலையாளி அட்டகாசம்

ஜாமீனில் வெளிவந்த கொலையாளி ஒருவர் பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேரை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு செய்யும் அட்டகாசத்தால் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கொலையாளி ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதன் பின்னர் தன்னுடைய வீட்டில் பிறந்த நாள் பார்ட்டி நடப்பதாக கூறி பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அழைப்பு விடுத்தார்
 
இந்த அழைப்பை ஏற்று பெண்கள் குழந்தைகள் உள்பட 20 பேர் அவருடைய வீட்டுக்கு சென்ற நிலையில் திடீரென வீட்டின் கதவுகளை எல்லாம் பூட்டி விட்டு அவர்களை பிணைக்கைதியாக வைத்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த உத்தரப் பிரதேச மாநில போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்ட போது வீட்டின் உள்ளே இருந்து கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
எனவே வீட்டினுள் பிணை கைதிகளாக இருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க போலீசார் நிதானமாக செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் போலீசாருக்கு உதவும் வகையில் தீவிரவாத எதிர்ப்பு படையை மத்திய அரசு அனுப்பி இருப்பதாகவும் அவர்கள் போலீசாருடன் கலந்து ஆலோசனை செய்து வருவதாகவும் பிணைக்கைதியாக சிக்கியிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை மீட்க அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மூன்று மணிநேரமாக நடைபெற்று வரும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது