ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (19:55 IST)

’பரபரப்பு’ - முதலமைச்சருக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய வழக்கறிஞர் கைது!

மேற்கு வங்க மாநிலம் புர்ட்வன் மாவட்டத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சுதிப்தோ ராய் (37).


 
 
கடந்த 2012 ஆம் அண்டு, இவரின் தாயாரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 
 
குற்றம் நடந்து நான்கு வருடம் கழிந்த பின்பும் அவருக்கு, நீதி கிடைக்கவில்லை. அதனால் இது குறித்து அவர் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினார்.
 
இதை அடுத்து, அவர் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதை தடுக்க வந்த அவரின் சகோதரரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சுதிப்தோ தரப்பில், ”நீதி கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பியது குற்றமா” என்று கேள்வி எழுப்பப்பட்டாலும், காவல்துரையினர் அவரை கைது செய்ததற்கு வேறு ஒரு காரணம் கூறியுள்ளனர்.
 
சுதிப்தோவை பிரிந்து வாழ்ந்து வரும், அவரின் மனைவி, தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். அதற்காக தான் சுதிப்தோவை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.