வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: ஞாயிறு, 17 ஜூலை 2016 (16:40 IST)

6 வயது மாணவன் அடித்துக்கொலை

ஐதராபாத்தில் 6 வயது மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.


 
ஐதராபாத்தை சேர்ந்தவர் அப்துல் மஜித் கார் டிரைவர். இவரது மகன் இப்ராகிம் (6) ஐ.ஏ.எஸ். காலனியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 12-ந்தேதி இப்ராகிமை 3-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தகராறில் பயங்கரமாக தாக்கினான். இதில் இப்ராகிமுக்கு இடுப்பு, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் அருகில் இருந்த சிறிய மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். 

ஆனால் மறுநாள் இப்ராகிம் வலியால் துடித்தான். உடனே இப்ராகிமை மருத்துவமனையில் சேர்த்தனர். அவன் வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை கண்டு பிடித்த மருத்துவர், தீவிர சிகிச்சை அளித்தும் இப்ராகிம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.