ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (08:51 IST)

ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் டெல்லி வருகை!

Operation Cauery
சூடான் நாட்டில் போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்டு இன்று டெல்லி வந்தடைந்தனர்.

சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே எழுந்துள்ள போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் பல்வேறு பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு “ஆபரேஷன் காவேரி” திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 பேர் இன்று டெல்லி வந்தடைந்துள்ளனர். அடுத்தடுத்த கட்டமாக அங்கிருக்கும் இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்லி வந்தடைந்துள்ளவர்களில் 9 தமிழர்களை தமிழகம் அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Edit by Prasanth.K