வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (10:07 IST)

குடிநீரை வீணடித்த குடும்பங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் அபராதம்.. பெங்களூருவில் பரபரப்பு..!

water
கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக பெங்களூரில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் நிலையில் குடிநீரை வீணாக்க கூடாது என்று பெங்களூரு குடிநீர் வாரியம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது குடிநீரை வீணாக்கிய குடும்பங்களுக்கு பெரும் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இந்த அபராதமே லட்சக்கணக்கில் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் அபராதம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடிநீரை வைத்து கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்காக சில குடும்பத்தினர் குடிநீரை வீணாக்கி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்களுக்கு ஒவ்வொரு குடும்பத்தையும் குடும்பத்திற்கும் 5000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது தொடர்ந்து இதே தவறை செய்து வந்தால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூர் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் அபராதம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 
Edited by Mahendran