"செங்கோட்டை நிகழ்ச்சிகளை யூடியூப்'பில் பார்க்கலாம்"

Webdunia|
FILE
செங்கோட்டையில் நடக்கும் கண்காட்சி மற்றும் நிகழ்ச்சிகளின் வீடியோவை தற்போது சமூக வலைதளமான யு டியூப்பில் (You Tube) பார்க்க சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

செங்கோட்டை, புரானா குய்லா ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக ஒளி ஒலிக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் 58 நிமிடங்களும், புரானா குய்லாவில் 54 நிமிடங்களும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியை சமூக வலைதளமான யு டியூப்’பில் பதிவேற்ற மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அமைச்சர் உத்தரவுப் படி அந்த பணிகள் முழுமை அடைந்துவிட்டது.
தற்போது யு டியூப்'பில் செங்கோட்டை, புரானா குய்லா வில் நடைபெறும் முழு ஒளி, ஒலி நிகழ்ச்சியையும் இலவசமாக பார்க்கலாம் என்று துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :