சுந்தர் சி நடிக்கும் ஆயுதம் செய்வோம்

sundar
webdunia photoWD
தமிழ்த்திரைப்பட உலகில் மட்டுமின்றி இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய புரட்சியை செய்து வரும் பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் முதல்முறையாய் தயாரிக்கும் படம் - ஆயுதம் செய்வோம்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் உதயன். விஜயகாந்த் நடித்த பேரரசு வெற்றிப்படத்தை அடுத்து இவர் இயக்கும் படம் இது.

சுந்தர் சிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். மேலும், நெப்போலியன், விவேக், நாசர், சுகன்யா, மணிவண்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

நேனே பேட்டைக்கு என்ற ஒரே ஒரு பாடல் காட்சியில் நடனமாடியிருக்கிறார் விந்தியா. திரைப்பட நடிகையாக மாளவிகா நடிக்கிறார்.

வன்முறையில் எடுக்கும் ஆயுதத்தை விட அன்புதான் சிறந்த ஆயுதம். அதுதான் நிரந்தரமாக ஜெயிக்கும் என்ற கருத்தைச் சொல்லும் படம் இது என்கிறார் இயக்குநர் உதயன்.

லட்சியத்தை வாழ்க்கையின் சுமையாக நினைக்கும் கதாநாயகன், காலப்போக்கில் அடுத்தவர்களின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக பாடுபடுகிறான். அவனை மாற்றிய சம்பவம் எது என்பதற்கான விடைதான் ஆயுதம் செய்வோம் படம்.

சைதை சத்யா என்ற மெக்கானிக்காக நடிக்கிறார் சுந்தர் சி. இதில் காமெடி, ஆக்ஷன், சென்ட்டிமென்ட் என கலக்கியிருக்கிறார். அஞ்சலி இந்தப் படத்தில் கலகலப்பான வாயாடிப் பெண்ணாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சியான உடையணிந்து நடித்திருக்கிறார்.

இசை - ஸ்ரீகா‌ந்‌த் தேவா
ஒளிப்பதிவு - கே.எ‌ஸ். செ‌ல்வரா‌ஜ்
பாடல்கள் - பா. ‌‌விஜ‌ய், ‌சினேக‌ன், உதய‌ன்
படத் தொகுப்பு - மு.கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன்
கலை- ஜனா
சண்டைப் பயிற்சி - தளப‌தி ‌தினே‌‌ஷ்
நடனம் - ‌தினே‌ஷ், ‌பிரபுஸ்ரீ‌னிவா‌ஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - உதய‌ன
தயா‌ரி‌ப்பு - ‌பிர‌‌மி‌ட் சா‌ய்‌மீரா புரொட‌க்ச‌ன்‌ஸ
Webdunia| Last Modified வியாழன், 27 டிசம்பர் 2007 (11:19 IST)


இதில் மேலும் படிக்கவும் :