FREE

On the App Store

FREE

On the App Store

சிரசாசனம்

Widgets Magazine

சிரசாசனம் என்றால் ஒருவர் தலைகீழாக நிற்பது. சிரஸ் என்ற வடமொழிச்சொல்லுக்கு தலை என்று பொருள்.

செய்முறை :

1. விரிப்பின் மீது கால் முட்டிகளை அகட்டி வைத்து மண்டியிட்டு உட்காரவும்.

2. கை விரல்களை கோர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மீது கைகளை வைக்கவும்.

3. உச்சந்தலையை விரிப்பின்மீது வைத்து கைகளால் தலையை பற்றி பிடித்துக் கொள்ளவும்.

4. தலை கை முட்டி, கால் விரல்கள் ஆகியவற்றை விரிப்பின் மீது அழுத்தி கால்முட்டிகளை உயர்த்தவும். அதே நேரத்தில் முதுகுத் தண்டு நேராக வரும்படி கால்களை முன்னால் நகர்த்தி கொண்டு வரவும்.

5. இது அர்த்த சிரசாசன நிலை. இதை ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும். குறைந்தது 50 எண்ணிக்கையும் அதிகபட்சம் ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும் 100 எண்ணிக்கை இருந்தால் போதும்.

6. சுவர் ஓரமாக இந்நிலையிலிருந்து கால்கள் இரண்டையும் உயரே மெதுவாக தூக்கி குதிகால்கள் சுவற்றின்மீது படும்படி வைத்து உடம்பை நேராக்கி கண்களை மூடி 100 எண்ணிக்கை செய்யவும்.

WD
7. மூன்று மாத பயிற்சிக்கு பிறகு சுவரை விட்டு விலகி அல்லது தனியாக செய்யலாம்.

8. 100 எண்ணிக்கை முடிந்ததும் மெதுவாக கால்களை மடித்து தரையை நோக்கி வந்து கால் பாதங்களை கை முட்டியை அழுத்தி தலையை உயர்த்தி எழுந்து மண்டியிட்டு உட்காரவும்.

9. பிறகு சவாசனத்தில் படுத்து உடலை தளர்த்தி ஓய்வு எடுக்கவும்.

எச்சரிக்கைகள்:

இந்த யோகாவிற்கு நீங்கள் புதிது என்றால் முதலில் சுவரின் துணையுடன் பயிற்சி செய்யவும். மேலும் தகுதி பெற்ற ஆசான் ஒருவரிடம் இந்த ஆசனத்தை கற்றுத்தேர்வதும் நல்லது.

அடிவயிறு மற்றும் முதுகெலுபு வலி இருப்பவர்கள் இந்த யோகாசனத்தை செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பலன்கள் :

கற்பனை சக்தியை மூலதனமாகக் கொண்ட கலைஞர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசியல் நிபுணர்கள், கம்பெனி நிர்வாகிகள், வேதாந்திரிகள் ஆகியோர் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் பலனை அடையலாம். மூளை, கண், காது, மூக்கு, வாய் போன்ற மிக முக்கியமான உறுப்புகளுக்கு தேவையான உயர் சத்துக்கள் தடையின்றி இரத்த ஓட்டத்தின் மூலம் பெறப்படுவதால் சீராகவும், சிறப்பாகவும் இயங்குகிறது. அதனால் அதை சார்ந்த நோய்களும் குணமடைகிறது. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான நல்லதொரு சாதனமாக இந்த ஆசனம் உதவுகிறது. மூளை செயல்களிலுள்ள மூளை நரம்புகளில் தங்கியுள்ள நச்சுக்களை துரிதமாக வெளியேற்றுகிறது. நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் சீர்படுகிறது.

மூக்கில் வாசனையை உணரும் சக்தி மரத்துவிட்டவர்களுக்கு வாசனை உணரும் சக்தியை மீட்டு தருகிறது. தொடர்ந்து செய்து வந்தால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். இரத்தம் சுத்தமடைகிறது. ஆதலால் ஞாபக சக்தி மன ஒருமைப்பாடு ஆகியவை அதிகரிக்கிறது. முகப்பொலிவு, நல்ல குரல் வளம் ஆகியவற்றை ஏற்படுத்க்துகிறது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

யோகா

சத்குரு தரிசனம் ‌வீடியோ‌-2

சத்குரு, கோவை ஈஷா யோகா மையத்தில் இருக்கும் நாட்களில் மாலை 6.10 ம‌ணிக்கு தியானலிங்கக் ...

சத்குரு தரிசனம் - ‌வீடியோ‌‌வி‌ல்

சத்குரு, கோவை ஈஷா யோகா மையத்தில் இருக்கும் நாட்களில் மாலை 6.10 ம‌ணிக்கு தியானலிங்கக் ...

பாபா ராம்தே‌வ், சத்குரு கூ‌ட்டாக அருளுரை

பதஞ்சலி யோகாவை சேர்ந்த பாபா ராம்தேவ் அவர்களும், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ...

உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் நே‌சி‌க்க வே‌ண்டு‌‌ம்

நா‌ன் மக‌த்துவமானவ‌‌‌ர், எ‌ன்னை ‌விட ‌சிற‌ந்தவ‌ர் வேறு யாருமே இ‌ல்லை. எ‌ன்னா‌ல் தா‌ன் ...

Widgets Magazine
Widgets Magazine

ப‌ல்சுவை

அதிக சத்தத்துடன் இசை கேட்டால் செவித் திறன் பாதிக்கும்

ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இசையை கேட்பதால் கேட்கும் திறன் பாதிப்படைவதாக உலக சுகாதார ...

உருளைக் கிழங்கின் மகத்துவம்

உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு. அதனை எப்படி செய்தாலும் சாப்பிடலாம்.

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

குழ‌ந்தைகளு‌க்கு சூடான த‌ண்‌ணீ‌ர்

குழ‌ந்தைகளை கு‌ளி‌க்க வை‌க்க ‌சில‌ர் அ‌திக சூடான த‌ண்‌ணீரை‌ப் பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள்.

'காப்பி அருந்துவதால் இரத்தக் குழாய் அடைப்பை தவிர்க்க முடியும்'

இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை, தினமும் 3 முதல் 5 ...

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

யூடியூப்பில் 'இந்தியாவின் மகள்' ஆவணப்படம்: டெல்லி காவல்துறை வலியுறுத்தல்

தடையை மீறி 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை ஒளிபரப்பிய பிபிசி மீது சட்டரீதியான நடவடிக்கை ...

இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூர் விஜயம்

சர்க்கரை நோயாலும், தொடர் இருமலாலும் அவதிப்பட்டு வரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ...

சிலி நாட்டில் எரிமலை வெடித்து சிதறியது - [வீடியோ மற்றும் புகைப்படங்கள்]

சிலி நாட்டில் வல்லாரிகா எரிமலை வெடித்து சிதறும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

கணவர் தியாகுவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் கவிஞர் தாமரை

கவிஞர் தாமரை தனது கணவர் தியாகுவிற்கு எதிராக 7ஆவது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

Widgets Magazine