ஆன்மீகப் பலன்கள் :
மனம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி பெறும். உங்கள் பிரக்ஞை கூர்மையடையும். உணர்வுகளை நீங்களே கட்டுப்படுத்தலாம்.
உடலும் மனமும் இயல்பான ஒத்திசைவு கொள்ளும்.
மன அழுத்தத்திலிருந்து நீங்களாகவே விடுபடும் திறன் வளரும்.
உள்ளார்ந்து சிந்திக்கும் திறன் வளர்ந்து பற்றற்ற நிலை தோன்றும்.
உடல் ரீதியான பலன்கள் :
மனத்தையும் உடலையும் புத்துணர்வூட்டும். எந்த வகையான மன அழுத்தத்திலிருந்தும் உடனடி நிவாரணம். வேலைக்கும் ஓய்வுக்குமான சமச்சீர் நிலையை உருவாக்குவதில் உதவும்.
ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கடுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மை விலகும். தூக்க மாத்திரைகளின் தேவைகள் குறையும்.
பலவிதமான தொந்தரவுகள் உள்ள பல மணி நேர இடைஞ்சலான உறக்கத்தை விட ஒரு சில நிமிடங்களே என்றாலும் மனோ-உடல் தணிவு நிலை அதிக பலனளிக்கும். வயது முதிர்ந்தோருக்கு சவாசனம் ஒரு சிறந்த பயிற்சி.
நடுத்தர வயதினோர் வேலைப்பளுவால் அடையும் மன, உடல் சோர்வுகளை போக்க இந்த ஆசனம் பெரிதும் உதவும். சவாசனத்தை பகல் நேரத்தில் குறைந்த இடைவெளி நேரத்தில் அதிகமாக செய்யவும். இதனால் பகலில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியும், மேலும் இரவில் தேவைப்பட்டால் கண் விழிக்கவும் உதவிடும்.
மற்ற ஆசனங்களின் மூலம் விறைப்படையும் தசைகள் சவாசனத்தின் மூலம் தளர்வுறுகின்றன. எந்த யோக பயிற்சியின் போதும் இறுதியாக சவாசனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை :
இந்த ஆசன நிலையில் இருக்கும்போது மூச்சுக்காற்று மந்தமடையும், மன இயக்கங்கள் நிறுத்தப்படும். சவம் போல் அப்படியே ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டும்.
இந்த ஆசனத்தை எத்தனை நேரம் வேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும் அதிகபட்சமாக அரை மணி நேரம் வரை செய்யலாம்.
|