சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா?

வியாழன், 5 ஜனவரி 2012 (15:28 IST)

இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணமுண்டா என்ற பண்டைய விவாதத்திற்கு முடிவு தெரியாதது போலவே 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா' என்று கேட்டால் கண்டவர் சொன்னதில்லை. சொல்பவர் கண்டதில்லை என்பது கடவுளுக்கு மட்டுமல்ல சேலை கட்டும் பெண்ணுக்கும்தான் பொருந்தும் என்றே நாம் கூறவேண்டும்.

அயல்நாட்டு அரைகுறை ஆடைகளைவிட நம் நாட்டு புடவை தான் பெரிதும் விரும்பப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்தியாவில் புடவை பெண்களின் தேசிய உடையாக இருந்தாலும் , குஜராத்தி, பெங்காலி, மராத்தி, பார்ஸி, மார்வாடி, மடிசார் என்று பல வகைகள் அணியப்படுகிறது.

நீங்கள் வேலைக்கு செல்லும் பெண் என்றால், புடவை தலைப்பைத் மடித்து தோளில் ‘பின்’ செய்து கொள்ளவும். வேலை செய்ய எளிதாக இருக்கும். நீங்கள் பார்ட்டி அல்லது விழாவிற்கு செல்வதானால் த் தலைப்பை மடிக்காமல் ஒரு பக்கத்தில் மட்டும் தோளில் ‘பின்’ செய்து கொள்ளுங்கள்.

புடவை அணியுமுன் அது சரியாக இஸ்திரி செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். கஞ்சி போட வேண்டியிருந்தால், போடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். பருமனான பெண்கள் ஜார்ஜெட், சிஃபான் அணியுங்கள். ஆர்கன்ஸா வேண்டாம், ஏனெனில் அதில் மேலும் பருமனாகத் தோன்றலாம்.

குள்ளமான பெண்கள் மெல்லிய பிரின்ட், சிறிய பார்டர் போட்ட புடவைகளை அணியவும். பெரிய பெரிய பிரின்ட்கள், பெரிய பார்டர் உள்ள புடவைகளில் அவர்கள் மேலும் குள்ளமாகத் தோன்றுவார்கள்.

மெலிந்த பெண்கள் ஆர்கன்ஸா, காட்டன், டிஸ்ஸு, டசர் போன்ற புடவைகளை அணிந்தால் அவர்கள் நிறைந்த தோற்றம் அளிக்கலாம்.

புடவையின் தேர்வு, தங்கள் நிறம், காலம், மற்றும் நேரத்துக்கு ஏற்ப செய்ய வேண்டும். கோடையில் ஷிபான், காட்டன் அல்லது கிரேப் அணியலாம்.குளிர்காலத்தில் சில்க், கிரேப் போன்றவற்றை அணியலாம்.

மழை நேரத்தில் சிந்தடிக் புடவைகள் அணியலாம். மாநிறமான பெண்கள் மிக லைட் நிறங்களை தேர்வு செய்யக்கூடாது. அவர்கள் நிறத்திற்கு அது நேர் மாறாகத் தோற்றமளிக்கும். ப்ரைட் நிற புடவை அவர்களுக்கு ஏற்றது.

சிவந்த நிறமுடைய பெண்களுக்கு எல்லா கலரும் ஏற்றது. ஆனால் செல்லுமிடத்தை நினைவில் கொண்டு தேர்வு செய்யவும்.

சுற்றிப் பார்க்கச் செல்லும் போது, விலை உயர்ந்த புடவை அணியாதீர்கள். அதே போல் பெரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சாதாரண புடவைகளை அணியாதீர்கள்.

சிந்தித்து புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் நீங்கள் கவர்ச்சியாகத் தோற்றம் அளிப்பீர்கள்

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

இன்றைய மங்கை

ஹேர் கலரிங் விதங்கள்

மஞ்சகலரு ஜிங்குசாங், பச்சகலரு ஜிங்குசாங்.. இந்த வண்ணங்கள் நம் வாழ்வில் எல்லா ...

கண்களை கவரும் உதடுகள்

முகத்திற்கு மேக்கப் போட நேரமில்லை என்றாலும் உதடுகளுக்கு மேக்கப் போட யாரும் மறப்பதில்லை. ...

நேதாஜியின் உளவாளி - வீரப்பெண்மணி சரஸ்வதி ராஜாமணி

அந்தப் பெண்ணிற்கு அப்போது பத்து வயதிருக்கும். ரங்கூனில் தங்கசுரங்கத்தை தனது சொத்தாக ...

கள்ளக் காதல் கொலைகள்!-பார்வை, தீர்வு

சமீப காலமாக கொலைகள் அதிகரித்துள்ளன. இவை சட்டம் ஒழுங்கு சம்மந்தப்பட்டவை அல்ல. கருணை ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

குடியிருப்புவாசிகளுடன் மோதலில் இறங்கிய பவர் ஸ்டார்

படம் நடிக்காவிடினும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சமில்லை. மோசடி வழக்கில் சிறைப்பறவையான ...

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

சமீபத்திய

சுதந்திரமான மன நிலையில் ஆடவில்லை - வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம்!

நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மேற்கிந்திய அணியிடம் ...

நேர்மையாக இருந்ததுதான் கெவின் பீட்டர்சன் செய்த ஒரே தவறு - கிறிஸ் டிரெம்லெட்

ஆஸ்ட்ரேலியாவிடம் ஆஷஸ் தொடரில் 5- 0 என்று உதை வாங்கியதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கெவின் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 டப்பிங் பணிகள் தீவிரம்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2-வின் தமிழ் டப்பிங் பணிகளுக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது. மே 1 ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

Widgets Magazine